Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

குடும்பஸ்தன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய இயக்குனர் பா.ரஞ்சித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘குடும்பஸ்தன்’. இப்படத்தை இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார்.இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

இப்படத்தில் தெலுங்கு நடிகை சான்வி மேகனா கதாநாயகியாக நடித்துள்ளார். இது நகைச்சுவையான பொழுதுபோக்கு கொண்ட குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது. அதாவது ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது.

நடிகர் குருசோமசுந்தரம் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். இந்நிலையில் திரைப்படத்தை பார்த்து இயக்குனர் பா.ரஞ்தித் படக்குழுவை நேரில அழைத்து பாராட்டியுள்ளார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News