Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தனது வருங்கால கணவருடன் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தனது திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகை மேகா ஆகாஷ், தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து ‛வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கிப் பாயும் தோட்டா, வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்’ போன்ற பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மேகா ஆகாஷ் நீண்டநாட்களாக காதலித்து வந்த சாய் விஷ்ணுவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. இவர்களது திருமணம் சென்னையில் செப்டம்பர் 15ல் நடைபெற உள்ளது. முன்பு செப்டம்பர் 14ல் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேகா ஆகாஷின் வருங்கால கணவர் சாய் விஷ்ணு பற்றிய சில முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சாய் விஷ்ணு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி திருநாவுக்கரசரின் இரண்டாவது மகன் ஆவார். சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் முடித்த அவரு, நியூயார்க்கில் பிலிம் மேக்கிங் படித்து, இயக்குனர் பா. ரஞ்சித்திடம் ‘காலா’, ‘கபாலி’ போன்ற படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.

இன்று நடிகை மேகா ஆகாஷ், தனது வருங்கால கணவர் சாய் விஷ்ணுவுடன் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்று திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார். அவர்களுடன் திருநாவுக்கரசர் மற்றும் அவரது குடும்பத்தினரும் இருந்தனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. திருமண பத்திரிகைகளை காங்கிரஸ் எம்பி, ராகுல், சோனியா உள்ளிட்ட கட்சி தலைவர்களிடமும் திருநாவுக்கரசர் அளித்துள்ளதால், திருமணத்திற்கு அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News