Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கிளாமருக்கு குறை வைக்காத நேஷனல் நேஷனல் க்ரஷ்… #RashmikaMandanna

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. அதன்பின் ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பு பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவுக்கென்ற ரசிகர்கள் குறையவில்லை. புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

தெலுங்கில் முன்னேறி, தமிழிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பு பெறவில்லை. பின்னர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழில் நிலையான இடத்தை பிடிக்க முயற்சிக்கிறார். மேலும் புஷ்பா 2 படத்தில் நடித்துள்ளார். படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகிறது.

படங்களில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா ஃபோட்டோஷூட்டிலும் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட ஃபோட்டோஷூட்டில் கோட் அணிந்து கிளாமராக இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனா ஒரு முடிவோடுதான் இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News