பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் ‘வருஷம் 16’ திரைப்படத்தின் மூலம் குஷ்பு கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு, இரு மகள்களை பெற்றுள்ளார். பா.ஜ.க.வில் இணைந்த அவர், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ரோஷமாக இருப்பது குஷ்புவின் தனிச்சிறப்பு. சினிமா மற்றும் அரசியல் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அதோடு, தனது வாழ்க்கையைப் பற்றியும் தொடர்ந்து பதிவுகள் வெளியிடுகிறார்.

அண்மையில், நடிகை குஷ்பு தனது காலில் கிரிப் பேண்ட் கட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைக் குறித்துப் பதிவு செய்துள்ள அவர், “நான் மற்றும் என்னுடைய பெஸ்டி மிகச்சிறந்த காம்போ” என தெரிவித்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்னதான் ஆச்சு என கமெண்ட்ஸூ குவித்து வருகின்றனர்.