நடிகை சுனைனா, 2005ல் தெலுங்கில் ‘குமார் vs குமாரி’ படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் நடித்த பின்னர், ‘மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’, ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’, ‘திருத்தணி’, ‘நீர்ப்பறவை’, ‘சமர்’, ‘வன்மம்’, ‘தெறி’, ‘நம்பியார்’, ‘கவலை வேண்டாம்’, ‘தொண்டன்’, ‘காளி’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘சில்லு கருப்பட்டி’, ‘ட்ரிப்’, ‘எஸ்டேட்’, ‘ரெஜினா’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சுனைனாவின் சில படங்கள் தவிர, பல படங்கள் தோல்வியடைந்தன. முன்னணி நடிகையாக வளர முடியாமல் தமிழ், தெலுங்கு திரையுலகில் நீண்டகாலமாக செயல்படுகிறார். அவரது சமீபத்திய படங்கள் ‘ட்ரிப்’, ‘லத்தி’, ‘ரெஜினா’ பெரிய தோல்வியை சந்தித்தன. ‘ரெஜினா’ படத்தின் தோல்விக்கு பிறகு புதிய வாய்ப்புகள் குறைந்தன. ‘சில்லுக்கருப்பட்டி’ மற்றும் ‘நீர்ப்பறவை’ படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. சமீபத்தில் வெளிவந்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வெப்சீரிஸிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

35 வயதான சுனைனா, இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர். தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலரின் கையை பிடித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, பூட்டு எமோஜி பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள், அவர் காதலர் யார் விரைவில் திருமணம் நடக்குமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
