தமிழில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக ரெஜினா என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.சமீபத்தில் சுனைனா ஒரு நபரின் கையை பிடித்து உள்ள புகைப்படத்துடன் ஒரு லாக் எமோஜியை பதிவிட்டு இருந்தார் இதைப்பார்த்த ரசிகர்கள், அவர் காதலிப்பதாக பேசி வந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், சுனைனா தனது நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அதேபோல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், இதைக்கண்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.