Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

காதலிக்க நேரமில்லை படத்தின் படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை செய்கிறார்.

காதலிக்க நேரமில்லை’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News