Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

காட்சி கொடுக்க வரும் ‘கருடன்’… ரிலீஸ் தேதி வெளியானது…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழில் காமெடியனாக அறிமுகமானவர்.தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் இவர் காமெடி கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து பிரபலமானவர்.கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சூரி.

விடுதலை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூரிக்கு நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக வந்தன. தற்போது விடுதலை 2 படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையில், சசிக்குமாருடன் இணைந்து நடித்துள்ள கருடன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர்.இதனை முன்னிட்டு வெளியான வீடியோவும் மிரட்டலாக அமைந்துள்ளது.

படப்பிடிப்பு முன்பே முடிவுற்ற நிலையில், பின்னணிப் பணிகள் நடைபெற்று வந்தன.இந்தப் படத்தின் கதை பிரபல இயக்குனர் வெற்றிமாறனால் எழுதப்பட்டது, மற்றும் துரை செந்தில்குமார் இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவதா, ரோஷிணி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாகப் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன. இந்நிலையில், படக்குழு, இப்படம் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News