Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

காஞ்சனா 4 படத்துல பூஜா ஹெக்டேவா? அட லேடி சூப்பர் ஸ்டார்ரும் நடிக்கிறாங்களா? #KANCHANA 4

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பேய் சீரியஸ் ஆக வெளிவந்த படங்கள் காஞ்சனா. இப்படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சமீபகாலமாக காஞ்சனா 4ம் பாகத்திற்கான திரைக்கதையை லாரன்ஸ் எழுதி வருவதாக கூறப்பட்டது.

இப்போது இது குறித்து வெளிவந்த புதிய தகவலின் படி, காஞ்சனா 4ம் பாகத்திற்கான கதை பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதாம். இந்த படத்தை வட இந்திய நிறுவனமான கோல்ட் மைன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

சுமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் இப்படம் உருவாகிறது என கூறப்படுகிறது. மேலும் இதில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவை பெரும் தொகையாக சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News