Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

காஞ்சனா 4-ஐ தூசி தட்டி கையில் எடுத்த ராகவா லாரன்ஸ்… முக்கியமான அப்டேட் வெளியானது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படம் வெளியாகி சக்க போடு போட்டது. இந்தப் படம் 50 கோடிக்கு மேல் வசூலை பெற்று தந்தது. இந்த படத்தின் வெற்றி ராகவா லாரன்ஸின் ஆசையை தூண்டி உள்ளது.

அவரிடமும் கையில் அட்சய பாத்திரம் போல் காஞ்சனா படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் இருக்கிறது.அதாவது காஞ்சனா 4, முனியின் ஐந்தாம் பாகம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார். ஏற்கனவே காஞ்சனா மூன்று பாகங்களும் நல்ல ஒரு வசூலை பெற்று தந்தது. காஞ்சனா படம் என்று சொன்னாலே வியாபாரத்திற்காக போட்டி போட்டு வருவார்கள்.

இந்நிலையில் தற்போது காஞ்சனா நான்காம் பாகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News