ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த “காஞ்சனா” திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியானது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 2015-ல் “காஞ்சனா 2” மற்றும் 2019-ல் “காஞ்சனா 3” ஆகிய பாகங்கள் வெளிவந்தன. ஹாரர் – காமெடி ஜானரில் உருவான இந்த “காஞ்சனா” திரைப்படங்கள், ரசிகர்களை மிகவும் கவர்ந்தன.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156152-1024x576.jpg)
தற்போது, ராகவேந்திரா புரடக்ஷன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனங்கள் இணைந்து, “காஞ்சனா 4” படத்தை உருவாக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்படத்தில், பூஜா ஹெக்டே, நோரா பதேகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இதற்காக, ₹90 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி வருகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156153.jpg)
ஜனவரி 23 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. தற்போது, பொள்ளாச்சி பகுதியில் விறுவிறுப்பாக தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தை, ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான புதிய அப்டேட்டுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.