Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

கவர்ச்சி என்பது கதையைப் பொறுத்து தான் – நடிகை பூஜிதா OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜிதா பொன்னாடா, தமிழில் ‘7’, ‘பகவான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார். விசாகப்பட்டினத்தில் பிறந்த பூஜிதாவைப் பார்த்தால், ஆந்திரா மிளகாய் போல காரமானவர் என்று தோன்றலாம். ஆனால், பேசுவதிலும் பழகுவதிலும் மதுரை ஜிகர்தண்டா போல குளுமையானவர். தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வரும் பூஜிதா தனது சினிமா பயணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

“நான் திட்டமிட்டு சினிமாவுக்கு வரவில்லை. என்ஜினீயரிங் படித்துவிட்டு சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அந்த சமயம் பொழுதுபோக்குக்காக நான் நடித்த சில குறும்படங்கள் (ஷார்ட் பிலிம்) அனைவரையும் கவனம் ஈர்த்தது. அவை பெரிய ‘ஹிட்’ ஆனதால், விளம்பரங்கள், படங்களில் நடிக்க அழைப்பு வந்தது.

கவர்ச்சியைப் பொறுத்தவரை அது கதையைப் பொறுத்து தான். அதேவேளை எனக்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகள் கிடையாது. ரசிக்கும்படியான கவர்ச்சி இருக்குமே தவிர, முகம் சுளிக்கும்படி நடிக்க மாட்டேன்.சினிமாவில் போட்டி இருக்கிறது. ஆனாலும் நான் யாரையும் போட்டியாக நினைத்தது இல்லை. வீட்டிலும் எனக்கு அழுத்தம் தந்தது கிடையாது. எனவே விமர்சனம் வரும் அளவுக்கு நான் இல்லை. ரொம்ப கூலாக இருக்கிறேன்,” என தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News