Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கல்வியின் முக்கியத்துவத்துக்காக போராடும் ‘விமல் ‘ வெளியான ‘சார்’ பட டீஸர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வருகிறார் போஸ் வெங்கட். 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.தற்போது அவர் விமல் நடிப்பில் மா.பொ. சி படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியான நிலையில், படத்தின் தலைப்பு சில தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்றப்பட்டுள்ளது. முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்போது S.I.R {சார்} என மாற்றப்பட்டுள்ளது.மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலைமை உள்ளது. கீழ்த்தட்டு மக்களில் இருந்து படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் போராட்டம் நடத்துகின்றனர். இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளனர். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News