2015ம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும், படம் முழுவதும் புஷ்பா .. புஷ்பா என இவர் பற்றித்தான் பேச்சாக இருக்கும். ரேஷ்மாவுக்கு இந்த படம் மிகப் பெரிய வரவேற்பையும் பெயரையும் பெற்றுக் கொடுத்தது.



இதைத் தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வரும் ரேஷ்மா, எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்திருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். தற்போது அதேபோல் கருப்பு நிற உடையில் கவர்ச்சி அளிக்கும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை புஷ்பா.