கராத்தே மாஸ்டரும், நடிகருமான சிஹான் உசேனி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். மிகுந்த நேர்மறை சிந்தனையுடன் வாழும் இவரை தமிழ்நாட்டில் பலரும் விரும்புகின்றனர். மேலும், தற்காப்பு கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஒரு பள்ளியையும் நடத்தி வருகிறார். தற்போது, அவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டியில், “தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாகவும், இன்றைய அரசியல் தலைவர்களாகவும் இருக்கும் பவன் கல்யாண் மற்றும் விஜய்யிடம் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.மாணவர்களுக்காக நான் உருவாக்கிய இந்தக் கலை மாளிகையை விற்று, அதன் தொகையை 8 ஆண்டுகளாக என்னிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற பயன்படுத்த வேண்டும்.

தெலுங்கு நடிகர் மற்றும் இன்றைய துணை முதல்வரான பவன் கல்யாண், என்னுடைய மாணவராக ஒருவரரை வருடம் பயிற்சி எடுத்தார். அவரின் இயற்பெயர் கல்யாண் குமார். பவன் என்கிற பெயரை அவருக்கு நான் தான் வைத்தேன். இன்று அவர் துணை முதல்வராக இருக்கும் நிலையில், அவர் இந்தக் கலை மாளிகையை 11 கோடிக்கு வாங்கி, அதை ஒரு கலைக்கோயிலாக மாற்ற வேண்டும்.
அதேபோல், நடிகர் விஜய்யிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் வில்வித்தை வீரர் அல்லது வீராங்கனை உருவாக வேண்டும். இதற்கு அவர் முயற்சி செய்ய வேண்டும்,” என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.