Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கமல் சார்ரின் விருமாண்டி படம் மிகவும் பிடிக்கும்… அந்த சீன்-ல் அவர் எப்படி அப்படி நடித்தார் என்பது இதுவரை தெரியவில்லை – நடிகர் நானி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘சூர்யாஸ் சாட்டர்டே’ படம் வரும் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு, படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ட்ரெய்லர் வெளிவந்ததும், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாயகன் நானியும் தொடர்ந்து பிரமோஷன்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் படத்தின் தொடர்பாகவும், சக நடிகர்கள் பற்றியும் பல விஷயங்களை தனது பிரமோஷன்களில் பேசி வருகிறார். இதற்கிடையில், எஸ்ஜே சூர்யா படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்திருப்பதை பார்க்க முடிகிறது. அவருடன் போட்டி போட்டு நானியும் நடித்திருப்பதை இப்போது பார்க்கலாம்.

நடிகர் கமல்ஹாசன் குறித்தும் நானி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் ‘விருமாண்டி’ படம் தனக்கு மிகவும் பிடித்தமானதாகும் என நானி கூறியுள்ளார். மேலும், ‘விருமாண்டி’ படத்தில் கமல்ஹாசனின் போஸ்டர் தனது அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில், ஒரு கோர்ட் சீனில் தூக்கம் அடைந்த பிறகு எழுந்து நடிப்பதாக கமல் நடித்திருப்பார். அந்தக் காட்சியில் உண்மையாக தூங்கியது போலவே கமல் நடிப்பார். அது எப்படி செய்ய முடிந்தது என எனக்கு இன்னும் தெரியவில்லை என்று நானி குறிப்பிட்டுள்ளார். ஆக்ஷன் மட்டும் அல்ல, நன்றாக நடிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நானி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News