Saturday, September 14, 2024

கதையின் இறுதி வடிவத்தை தயார் செய்யும் அட்லி… யாரைத்தான் இயக்க போகிறார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றியை உருவாக்கியவர் இயக்குனர் அட்லீ. அதேபோல, ஹிந்தியில் ஷாரூக்கானுடன் ‘ஜவான்’ படத்தை இயக்கி 1000 கோடி வசூலைப் பெற்று வியப்பை ஏற்படுத்தினார்.

‘ஜவான்’ படம் வெளிவந்து ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. ஆனால், அட்லீயின் அடுத்த படத்தை யாரை வைத்து இயக்க போகிறார் என்பது இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அட்லி – ரஜினி, அட்லி- கமல், அட்லி – சூர்யா என ஏகப்பட்ட தகவல்கள் இவரது அடுத்த படத்தை குறித்து உலா வந்தன. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை நாயகனாக கொண்டு ஒரு படத்தை இயக்கப்போகிறார் என்று தகவல் வந்தது. பின்னர், ஹிந்தி நடிகர் சல்மான் கானை நடிக்கவைக்கப் போகிறார் என்று சொன்னார்கள். ஆனால், இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எனினும், தற்போது அட்லீ தனது மும்பை அலுவலகத்தில் உதவியாளர்களுடன் அடுத்த படத்திற்கான கதையின் இறுதி வடிவத்தைத் தயார் செய்து கொண்டிருக்கிறார். அதை முடித்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அந்த படம் மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்பது தற்போதைய தகவல் என சொல்லப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News