Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கடைசிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் குபேரா திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வரும் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.

குபேரா படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. தொடர்ந்து மும்பை, பாங்காக் போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது தனுஷின் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்போது தனுஷ், நாகார்ஜூனா சம்மந்தப்பட்ட ஆக்ஷன் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைதொடர்ந்து இப்படத்தினை குறித்த முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News