Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

கசிந்த விஜய் தேவரகொண்டாவின் #VD12 படப்பிடிப்பு புகைப்படங்கள்… வேண்டுகோள் வைத்த படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் ‘கீதா கோவிந்தம்’, ‘அர்ஜூன் ரெட்டி’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக ‘பேமிலி ஸ்டார்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கவுதம் தின்னனுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்து உள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், உங்களுக்காக நாங்கள் சிறந்த படத்தை தயாரிக்க கடினமாக உழைக்கிறோம். நாங்கள் 60 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். தற்போது இலங்கையில் படப்பிடிப்பில் இருக்கிறோம். கடந்த 6 மாதங்களாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்காக மறைத்து வைத்திருக்கிறோம். ஆதலால் எந்தவொரு புகைப்படத்தையும் பகிர வேண்டாம். அதிகாரபூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவும், மிக விரைவில் வரும்,” என்று பதிவிட்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News