பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ், “மெரினா, தமிழ் படம், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், கலகலப்பு 2” போன்ற பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156140.png)
அவர் “நாய் சேகர்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார், மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனைத் தொடர்ந்து, “கான்ஜுரிங் கண்ணப்பன்”, “சட்டம் என் கையில்” ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156141.jpg)
“கான்ஜுரிங் கண்ணப்பன்” படத்தின் முதல் பாகம் வெற்றிபெற்றதால், அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், சதீஷ் மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.