ஆன்லைன் சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட மொத்தம் 29 பேர்மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கிற்கான விசாரணைக்காக அவர்கள் அனைவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனை ஏற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று அமலாக்கத்துறைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
பின்னர், ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு ரூபாய்கூட கிடைக்கவில்லை. இனிமேல் இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்துள்ளேன். என் தரவுகளை அவர்கள் பதிவு செய்து வைத்தனர். என்னை மீண்டும் விசாரணைக்கு வருமாறு கூறவில்லை” என்றுள்ளார்