Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஐஸ்வர்யா லக்ஷ்மியின்‌ பிறந்தநாளையொட்டி வெளியான #SDT18 படத்தின் கதாபாத்திர போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மாயநதி, குமாரி போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்றார். மேலும், சாய் பல்லவியின் கார்கி படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.

தற்போது, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம், ஐஸ்வர்யா லஷ்மியின் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் அவர் நடித்த ஒரு புதிய படம், வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது, மேலும் தெலுங்கில் சாய் தரம் தேஜ் படத்தில் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா லஷ்மியின் 32ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்குப் படத்தின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்தப் படத்தில், அவர் வசந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News