Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி ராமைய்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்திய பிரபலங்கள்! #PHOTO GALLERY

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதிக்கும் கடந்த 10ம் தேதி சென்னையில் அர்ஜுன் கட்டிய அஞ்சநேயர் கோவிலில் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. பின்னர், இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 15ம் தேதி நடைபெற்றது. இதில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

திருமணத்தில் அருகிலுள்ள உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை சென்னை லீலா பேலசில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தனது மனைவி துர்க்காவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பாஜக அண்ணாமலை, ஜிகே வாசன், அன்புமணி ராமதாஸ், சீமான், டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அவர்களுக்கு அடுத்ததாக சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நடிகர் பிரபுதேவா, சிவகார்த்திகேயன், குஷ்பு சுந்தர், சினேகா, பிரசன்னா, இயக்குநர் ஷங்கர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கவுண்டமணி, விஜய் சேதுபதி, ஷாலினி தனது மகளுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இவ்விழாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News