அஜித், ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் மாறி மாறி நடித்து வந்தார். இந்த இரண்டு படங்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து அடுத்தகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதுபோல குட் பேட் அக்லி படப்பிடிப்பு இந்த ஆண்டிற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த இரண்டு படங்களில் எது முதலில் வெளியாகும் என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்தது.


‘விடாமுயற்சி’ படமே முதலில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதென பரவலாக கூறப்படுகிறது.அதே சமயம், ‘குட் பேட் அக்லி’ படத்தை 2025 பொங்கல் வெளியீடாக அறிவித்துள்ளனர்.இப்படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகும் என இப்பட தயாரிப்பாளரும் உறுதிசெய்துள்ளார். ‘விடாமுயற்சி’ படம் டிசம்பரில் வெளியாகுமா என்பது இனிதான் தெரியும். அப்படி நடந்தால், அஜித்தின் படங்கள் தொடர்ச்சியாக ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இதனை தொடர்ந்து, அஜித் 64வது படத்திற்கான பேச்சுவார்த்தை தற்போது தொடங்கிவிட்டது என்று சினிமா ட்டாரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அந்த படம் உருவாகும் என பேசப்படுகிறது. சிவா இயக்கத்தில் ஏற்கனவே, “வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். இந்த கூட்டணி உறுதியானால் ஐந்தாவது முறையாக அஜித், சிவா இணைவார்கள் இதுகுறித்து தகவல் அதிகாரபூர்வமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.