Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள புதிய படம் ‘ஏழு கடல், ஏழு மலை’. ‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்த நடிகர் நிவின் பாலி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் திரையிடப்பட இருக்கிறது. இந்த தகவலை நடிகர் நிவின் பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் மற்றொரு அங்கீகாரத்தால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் ஏழு கடல் ஏழு மலை படம் உருவானது குறித்து பேசிய இயக்குநர் ராம், ஏழு கடல் ஏழு மலை படம் உருவாகக் காரணம் கடந்த 2019-ல் கொரோனா காலத்தில் மனித குலம் நம்பிக்கையூட்டும் வரலாறு என்ற புத்தகத்தைப் படித்தேன். அந்த புத்தகத்தில் மனிதனால் மற்றொருவரை வெறுக்கவோ, துன்புறுத்தவோ முடியாது. மனிதன் தன்னுடைய எல்லா வேறுபாட்டையும் தாண்டி கரம் கோர்த்து நிற்பான் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்த கதை அது.

அந்த தத்துவத்தின் அடிப்படையில் உருவானதே, ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் எனத் தெரிவித்தார். மேலும், எனது முந்தைய நான்கு படங்கள் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், ஐந்தாவது படமான ஏழு கடல் ஏழு மலை நிச்சயமாகப் பிடிக்கும் எனவும் இந்த படம் முழுக்க முழுக்க பேசுவது “மானுடத்தின் காதலைப் பற்றியும், இந்த உலகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறது எனவும் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News