பிரபலமான டென்னிஸ் வீராங்கனையாக இருக்கும் சானியா மிர்சா, பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்திருந்தார். அவர்கள் இருவரும் 15 வருடங்கள் வரை திருமண வாழ்வில் இருந்தனர். ஆனால், கருத்து வேறுபாடுகளால் அந்த திருமண வாழ்வு முறிந்தது.

இந்த சூழலில், சானியா மிர்சாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 2019-ம் ஆண்டிலேயே வெளியானது. ஆனால், அதற்கு பிறகு எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.
சானியா மிர்சா, தனது கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனே மற்றும் Parineeti Chopra ஆகியோர் பொருத்தமானவர்கள் என்று பரிந்துரைத்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சானியா மிர்சா அளித்த பேட்டியில், “என் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்தால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில், அவர் என் விருப்பமான நடிகர். அவர் நடித்தால் அவரை காதலிக்கத் தயார்” என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.