ஜு தமிழில் ஒளிப்பரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நிற பாகுபாடு பற்றி விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரித்திகா பேசுகையில் நான் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் நிறத்தால் எனக்கு பல திரைப்பட வாய்ப்புகள் ரிஜெக்ட் ஆகி இருக்கிறது. நேரடியாகவே சிலர் நாங்கள் இந்த படத்திற்கு கலராக இருக்கிற பெண்ணை தேடுகிறோம் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் படம் வெளியான பிறகு அந்த நடிகை ஏற்கனவே கலரா இருப்பாங்க ஆனால் அவங்களையும் கலர் கம்மியாக நடிக்க வைத்திருப்பார்கள். அப்போ நமக்கு மனசு வலிக்கும் என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000043940-844x1024.png)