Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

என் தந்தை பெயரால் நான் அறியப்படுவதைக் விரும்பவில்லை என நடிகர் துல்கர் சல்மான் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

என் தந்தை பெயரால் நான் அறியப்படுவதைக் விரும்பவில்லை என நடிகர் துல்கர் சல்மான் மனம் திறந்து கூறியுள்ளார். மற்ற மொழிப்படங்களில் நடிக்கும்போது நான் நானாகவே பார்க்கப்படுகிறேன். என் தந்தையால் பெருமைப்படுகிறேன். ஆனால், என் குடும்பத்தின் பெயரால் அறியப்படுவதையோ, அதன் மூலம் திரைப்படங்களில் நடிப்பதையோ விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

துல்கர் சல்மான் அண்மைக்காலமாக மலையாளம் தவிர்த்து, மற்ற மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பான கேள்விக்கு அவர் அளித்த நேர்காணலில், நான் மம்மூட்டியின் மகனாக இருந்தாலும், துல்கர் சல்மானாகவே அங்கீகரிக்கப்பட விரும்புகிறேன். எனக்கு அந்த அங்கீகாரத்தை கிடைக்க விடாமல், தங்களின் சுயநலத்துக்காக சில குழுக்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.

தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நான் நடிக்கும்போது பார்வையாளர்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் அங்கேயும் வந்து சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றனர். நானும் அவர்களின் மாநிலத்தைச் சேர்ந்தவன்தான் என்பதை கூட அவர்கள் நினைப்பதில்லை. இதனால் பார்வையாளர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றாலும், என்னால் அதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைய முடியவில்லை. இது என்னுடைய மனநல ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று கருதுகிறேன்.

மற்ற மொழிப்படங்களில் நடிக்கும்போது நான் நானாகவே பார்க்கப்படுகிறேன். என் தந்தையால் பெருமைப்படுகிறேன். ஆனால், என் குடும்பத்தின் பெயரால் அறியப்படுவதையோ, அதன் மூலம் திரைப்படங்களில் நடிப்பதையோ விரும்பவில்லை என்றுள்ளார் துல்கர் சல்மான்.

- Advertisement -

Read more

Local News