பேட்ட, என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற பல படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். தற்போது அவர் நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இதில் அவர் விஜய் ஆண்டனியின் ஜோடியாக நடித்துள்ளார். விஜய் மில்டன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி வெளிவருகிறது.தற்போது இப்படத்தின் SNEAK PEEKம் ஒன்று வெளியாகியுள்ளது.
படத்தில் நடித்தது குறித்துப் பேசும் மேகா ஆகாஷ் கூறியதாவது: “விஜய் மில்டன் சார் எப்போதும் தனது படங்களில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரங்களை வழங்குவார். ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்காக என்னை அணுகியபோது, கதையைப் கேட்கும் முன்பே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் எனக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைக்கிறது என்பதுதான். நான் நினைத்தது போலவே, இப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. என் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பாக இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது.
என் கேரியரில் சிறந்த கதாபாத்திரத்தை ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் மில்டன் கொடுத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது நன்றி,” என்றார்.