Tuesday, November 19, 2024

என் கதவுகளை சாத்திவிட்டேன்… மிகவும் சோகமான மனநிலையோடு ஸ்ருதிஹாசன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள பாடல் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரின் சோகத்திற்க்கு ஆறுதல் சொல்லும் வகையில் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஸ்ருதிஹாசன் கடைசியாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இனிமேல் என ரொமாண்டிக் சாங் உருவாக்கியிருந்தார் தற்போது அவர் “I Shut the door and hate the Key” என காதல் தோல்வி பாடல் போல ஒரு பாடலை பாடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

Video Link: https://www.instagram.com/reel/C7eovs1B-af/?utm_source=ig_web_button_share_sheet

நீங்க ஒரு ராக் ஸ்டார் எதுக்கும் கவலைப்படாதீங்க, என்கறும் உங்களுக்கு நிச்சயம் எல்லாமே சரியாக அமையும், இதுவும் கடந்து போகும் என நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பல ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர் .

தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் டக்காயிட் எ லவ் ஸ்டோரி, சலார் 2 உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சென்னை ஸ்டோரி எனும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் லவ் பிரேக்கப் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தற்போது தான் சிங்கிள் என்றும் மிங்கிளாக விருப்பமில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News