Thursday, November 21, 2024

என் அப்பாவின் வழிகாட்டுதலோடு தான் இந்த படத்தை எடுத்தேன்… இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள உமாபதி ராமைய்யா OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உமாபதி ராமைய்யா, நடிகராக அதிகம் பிரபலமடையாமல் இருந்த நிலையில், இயக்குநராக தனது புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளார். தனது தந்தை தம்பி ராமைய்யாவின் உதவியுடன் ‘ராஜாகிளி’ படத்தை இயக்கியுள்ளார். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உமாபதி, “நான் இயக்குநராக மாறியது ஒரு விபத்து. என் அப்பாவின் வழிகாட்டுதலோடு தான் இந்த படத்தை முடித்தேன்,” என்று பகிர்ந்தார்.

மாமனார் அர்ஜுன் இயக்குநராகச் செயல்பட்டு வரும் நிலையில், அவரது மருமகனும் இப்போது இயக்குநராக மாறியதற்கு பலரும் பாராட்டுக்களைக் கூறி வருகின்றனர்.ராஜாகிளி’ படத்தின் முக்கிய கதாநாயகன் சமுத்திரகனியே. சமுத்திரகனியை தனது தந்தை “தம்பி” என அழைப்பார்; ஆனால் நான் “அண்ணா” என்று அழைப்பேன். சமுத்திரகனி தெலுங்கு படங்களில் மிகவும் பிஸியாக இருந்தபோதிலும், இந்த நிகழ்ச்சிக்கு வந்து என்னை ஆசீர்வதித்ததற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

படப்பிடிப்பு இடங்களில் அவர் எனக்கு மிகுந்த உதவியாக இருந்தார். சில காட்சிகளை மறுபடியும் எடுக்க வேண்டும் என்று நான் தயங்கினால் கூட, அவர் உடனே அனைவரையும் கூப்பிட்டு, “இங்கே வாருங்கள், நடிக்கத் தயாராகுங்கள்,” என்று உற்சாகமாக நடத்துவார். “லவ்யூ கனி அண்ணா,” என்று சமுத்திரகனிக்கு தனது நன்றியை தெரிவித்தார் உமாபதி.

- Advertisement -

Read more

Local News