Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

என்னை தொந்தரவு செய்யாதீங்க… விடாமுயற்சி படப்பிடிப்பால் கடுப்பான அஜித் லைக்காவிடம் கறார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்தார் அஜித்.இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டியே வெளியானது.அசர்பைஜானில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜான்னில் தொடங்கியது.

விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்த சூழலில் அசர்பைஜானில் ஏற்பட்ட காலசூழல் காரணமாக படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருந்த சமயத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் இணைந்தார்.

பின்னர் விடாமுயற்சி படத்தின் மீதி சூட்டிங் மே மாதத்தின் தொடக்கத்தில் மீண்டும் அசர்பைஜானில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரையிலும் தொடங்காமல் இருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அதேசமயம் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்காமல் தாமதமாக காரணம் லைகாவின் நிதிநிலை பிரச்சினை தான் எனகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் லைகா தயாரிப்பாளர் சுபாஸ்கரனுடன் அஜித் இந்தப் படம் குறித்து பேசியுள்ளதாக தெரிகிறது. அனைத்தையும் ஏற்பாடு செய்து திட்டமிட்ட பின்னர் சூட்டிங் நடத்தமுடியும் என்று தெரிந்தால் தன்னை அழையுங்கள் அதற்கு முன்னதாக தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்தாகவும் அவரின் அடுத்தப்படமான குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்ல் பங்கேற்று முதல் படப்பிடிப்பு காட்சிகளில் நடிக்கவுள்ளேன் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News