மலையாள திரையுலகில் வித்தியாசமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஜோஜூ ஜார்ஜ். சில வருடங்களுக்கு முன்பு வரை துணை நடிகராக இருந்த இவர், இப்போது கதையின் நாயகனாக, குணச்சித்திர நடிகராக, வில்லனாக பல்வேறு விதங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.அதனாலேயே இவரை மலையாளத் திரையுலகின் விஜய்சேதுபதி என்று கூட கூறுகின்றனர்.

தமிழில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் தனது ஃபேவரைட் நடிகரான விஜய்சேதுபதியை கேரளாவில் சந்தித்த ஜோஜூ ஜார்ஜ், அந்த சந்திப்பில் விஜய்சேதுபதி தனக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, “என்னுடைய பேவரைட் நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்தது அளவிட முடியாத மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து அதன் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக கொச்சி சென்றபோது ஜோஜூ ஜார்ஜ் அவரை சந்தித்துள்ளார்.