Tuesday, November 19, 2024

எனக்கேற்ற நல்ல கதைகள் இல்லாததால் தான் பாலிவுட்டில் நடிக்காமல் இருந்தேன் – நடிகை ஜோதிகா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலிவுட்டில் தமக்கு கிடைத்த வரவேற்பைப் பற்றி கூறினார். “பாலிவுட்டில் 25 ஆண்டுகள் சத்தம் இல்லாமல் இருந்தேன். இப்போது கிடைத்த வரவேற்பு எனக்கு எதிர்பாராத சந்தோஷத்தை அளிக்கிறது.சமீபத்தில் ஸ்ரீகாந்த் படத்தில் நடித்திருந்தார் அப்படம் ஜோதிகாவுக்கு வரவேற்பை பெற்றுத்தந்தது.

நல்ல கதை இல்லாததால் இத்தனை நாள்கள் பாலிவுட்டில் நடிக்கவில்லை. நல்ல கதை இருந்தால் பாலிவுட், கோலிவுட் எதுவாக இருந்தாலும் நடிக்கத் தயார்.

இந்திய சினிமா ரசிகர்களை தென்னிந்தியா – வடஇந்தியா எனப் பிரிக்க வேண்டாம். தென்னிந்தியாவில் இந்தி படங்களை அதிகமாகப் பார்க்க மாட்டார்கள். ஆனால் வடஇந்தியாவில் தென்னிந்திய படங்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன.ரஜினி சார் பற்றிய பதிவுகள் வட இந்தியாவில் ட்ரெண்ட் ஆகிறது. இந்திய சினிமாவில் இவ்விதமான வித்தியாசங்களைப் பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. எல்லோரும் இந்திய ரசிகர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News