
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரியங்கா மோகன், தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது “எனக்கு மிகவும் பிடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.அவரது நடிப்பும் எளிமையான குணமும் ரொம்பவே பிடிக்கும்.அவரை சந்திக்கும் வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன்.அதேபோல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும் எனக்கு பிடிக்கும்.சிறு வயதில் அவர் என்னுடைய கிரஷ்” என்று பகிர்ந்துள்ளார்.
