Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

எனக்கும் அஜித்துக்கும் மாஸ் சீன்ஸ் இருக்கு… விடாமுயற்சி படப்பிடிப்பை உறுதிப்படுத்திய ஆக்ஷன் கிங் அர்ஜூன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் ஜூன் 18ம் தேதி அசர்பைஜான் செல்லவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்பு அஜித் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார் என்றும், படத்தின் 50 சதவிகித சம்பளம் நிலுவையில் இருப்பதால் அதை பெற நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் கூறப்பட்டிருந்தது. இப்பொழுது இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, அவர் ஜூன் 18ம் தேதி அசர்பைஜான் செல்லவுள்ளார்.

இதனிடையே, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் அர்ஜுன் ஒரு பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் பங்கேற்றனர். தற்பொழுது, அர்ஜுன் “விடாமுயற்சி” படத்தைப் பற்றிப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

படத்தில் 30 சதவிகித படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதையும், இந்த மாதம் அசர்பைஜானில் படப்பிடிப்பு துவங்க உள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார். மேலும், அஜித்துடன் மாஸான காட்சிகள் உள்ளதா என்ற கேள்விக்கு மொத்தமும் இப்பவே சொல்லிவிடவா என காமெடியாக பதிலளித்தார்.படம் மிகச் சிறப்பாக உருவாகி வருவதாக அவர் கூறியுள்ளார். ஜூன் 20ம் தேதி அசர்பைஜானில் தொடங்கவுள்ள படப்பிடிப்பில் திரிஷா மற்றும் அர்ஜுனும் பங்கேற்க உள்ளனர். ஒருமாத காலத்திற்கு அசர்பைஜானிலேயே படக்குழுவினர் தங்கி படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். ஜூலை முதல் வாரத்தில் சில நாட்கள் அஜித் தனது சொந்த வேலைகளுக்காக சென்னை வரவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News