Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

உருவாகிறது பிரேமலு 2… அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டுவர திட்டம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்த ஆண்டின் மிகப்பெரிய வருமானம் ஈட்டிய படங்களில் நட்சத்திரங்களில்லாமல் உருவாகிய ‘பிரேமலு’ திரைப்படம் குறிப்பிடத்தக்கது. காதல் மற்றும் நகைச்சுவை கதையம்சத்தில் உருவான இப்படம், உலகம் முழுவதும் ரூ.136 கோடி வசூல் செய்து, இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்திய படங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த வசூல் எவ்வளவு பெரியது எனத் தெரியாதவர்களுக்கு கூட, இத்திரைப்படத்தில் எந்த நட்சத்திரங்களும் இல்லாமல் புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

மொத்தம் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், அதன் முதலீட்டைக் காட்டிலும் 45 மடங்கு அதிக லாபம் ஈட்டியுள்ளது, இது 4,500 சதவீதம் ஆகும். கிரிஷ் ஏ.டி இயக்கிய இந்த படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது, இத்திரைப்படம் ஆஹா ஓ.டி.டி தளத்தில் தெலுங்கிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், இந்தி மொழிகளிலும் கிடைக்கிறது.

பிரேமலு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படக்குழு அதன் 2-ம் பாகத்தைக் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், ‘பிரேமலு 2’ குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது, மேலும் அடுத்த ஓணம் பண்டிகையையொட்டி ‘பிரேமலு 2’ வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News