Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

உருவாகிறது தங்கலான் பாகம் 2… அப்டேட் கொடுத்து அசத்திய நடிகர் விக்ரம்! #Thangalaan 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தங்கலான்”. மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலரும் இதில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

“தங்கலான்” படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதுடன், வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 26.44 கோடி ரூபாயாக இருந்தது, இது விக்ரமின் படங்களில் மிகப்பெரிய தொடக்கமாகும்.

“தங்கலான்” படத்திற்கு கிடைத்த சிறப்பான வரவேற்பு காரணமாக, இப்படத்தின் பாகம் 2-ஐ எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்து நடிகர் விக்ரம் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். இப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News