சினேகா அவ்வப்போது தனது குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படங்களையும், உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது தனது மகனுடன் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சினேகா. அதில், “நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அதையே அவர்கள் செய்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள், சினேகாவின் மகன் விஹான் தனது அம்மாவிற்கே போட்டி கொடுக்கும் அளவிற்கு உடற்பயிற்சி செய்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
