உங்கள் டூரிங் டாக்கீஸ்-ல்
வரும் 22 ஆம் தேதி முதல் !!!! ✨
மைல்கல் என்ற புதிய நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்
ஒளிபரப்பாக இருக்கிறது.
பல மைல் கல்களைத் தொட்டு விட்டு
தொடர்ந்து இந்த சினிமா உலகில்
வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்ற பல சாதனையாளர்களுடைய
அனுபவங்கள் இந்த நிகழ்ச்சியிலே
ஒளிபரப்பாக இருக்கின்றன.
இந்த மைல்கல் நிகழ்ச்சியில்
முதலில் இடம் பெற இருக்கின்ற சாதனையாளர்
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

தன்னுடைய திரைப் பயணத்தை முழுமையாக உங்களோடு இந்த நிகழ்ச்சியிலே அவர் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.1977 ஆம் ஆண்டில் ஒரு கணக்காளராக இந்திய சினிமா உலகின் மாமேதையான
எல் வி பிரசாத் இடம் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி அதற்குப் பின்னாலே அவரிடமே உதவி இயக்குனராக பணியாற்றுகின்ற அரிய வாய்ப்பினைப் பெற்றவர்தான் சுரேஷ் கிருஷ்ணா.
அடுத்து 1979ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் சரித்திர சாதனைகளை செய்த தாசரி நாராயணராவோடு உதவி இயக்குனராக பணியாற்றுகின்ற வாய்ப்பு இவருக்கு அமைந்தது. சுரேஷ் கிருஷ்ணா என்றவுடன் எல்லோரது நினைவிலும் வரக்கூடிய பெயர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர். தமிழ் சினிமா உலகின் பிதாமகன் என்று போற்றப்படுகின்ற கே பாலச்சந்தரிடம் 1980 ஆம் ஆண்டில் உதவி இயக்குனராக சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா பணியாற்றிய முதல் படமாக ஏக் துஜே கே லியே ஹிந்தி படம் அமைந்தது.
ஏழு வருடங்களில் கே பாலச் சந்தருடன் இணைந்து 14 படங்களில் பணியாற்றியவர் சுரேஷ் கிருஷ்ணா.அச்சமில்லை அச்சமில்லை. சிந்து பைரவி புன்னகை மன்னன் போன்ற தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் பணியாற்றுகின்ற வாய்ப்புப் பெற்ற சுரேஷ் கிருஷ்ணாவை சத்யா திரைப்படத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டில் இயக்குனராக அறிமுகம் செய்தவர் கமல்ஹாசன்
கமலின் மோதிரக்கையால் இயக்குனராக அறிமுகப்படுத்தப்பட்ட சுரேஷ் கிருஷ்ணா அவருக்கு பெருமை சேர்க்கின்ற வகையிலே பல வெற்றிப்படங்களை தந்திருக்கிறார். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படங்களின் பட்டியல் மிக நீளமானது.
கமல்ஹாசன் நடிப்பில் இந்துருடு சந்துருடு, ஆளவந்தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாமலை, வீரா, பாட்ஷா ,பாபா
சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க லவ் என்ற படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா மலையாளத்திலே இயக்கிய தி பிரின்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மோகன்லால். கன்னடப் பட உலகின் முக்கியமான கதாநாயகனான விஷ்ணுவர்தன் நடிப்பில் கடம்பா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா புதுமுகங்களை வைத்து தமிழ் சினிமா உலகிற்கு அளித்த வெற்றிப் படம் தான் ஆஹா
இசைஞானி இளையராஜா உடன் இணைந்து பல படங்களில் பணியாற்றுகின்ற வாய்ப்பினைப் பெற்ற சுரேஷ் கிருஷ்ணா ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய முதல் படமாக சங்கமம் அமைந்தது
வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க பிரேமா மற்றும் தர்மசக்கரம் ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா தெலுங்கு வட உலகில் சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவி நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் தான் மாஸ்டர்
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் முத்திரை பதித்த இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணாஅந்த அனுபவங்கள் பலவற்றை இந்த மைல்கல் நிகழ்ச்சியிலே உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.
#SureshKrissna #TamilCinema #TouringTalkies