ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தமிழ் சீரியல்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரேஷ்மா. அவரது முழுப் பெயர் ரேஷ்மா பசுப்புலேட்டி. நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரியாவார். ஆந்திராவில் சீரியல் நடிகை மற்றும் விஜே (வீடியோ ஜாக்கி) ஆக தனது கேரியரைத் தொடங்கிய ரேஷ்மா, விமான பணிப்பெண்ணாகவும் பணியாற்றியுள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலான பின்னர், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரை பிரிந்தார்.



அதன்பின் சென்னை வந்து மகனுடன் செட்டிலானார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் சென்றார். இதுவரை 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். எழில் இயக்கிய ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பாவாக வந்து, சூரியை கதறவிடும் வேடத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்தார். இந்தப் படத்தில் புஷ்பாவின் கணவரின் காமெடி ரசிகர்களிடம் பிரபலமானது.


இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேவதி எனும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா. சில சீரியல்களில் வில்லியாகவும் நடித்து வருகிறார். சிறந்த வில்லி என்ற விருதும் பெற்றார். சினிமாவில் அவ்வப்போது காமெடி காட்சிகளில் மட்டும் நடித்து வருகிறார்.விமல் நடிப்பில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து, வொர்க்அவுட் செய்யும் ஃபிட்னஸ் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.