Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இரவு பகல் பாராது ஹங்கேரியில் உருவான சமுத்திரக்கனி படத்தின் பிண்ணனி இசை…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, மிளகா, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி தற்போது இயக்கி வரும் படம் ‘திரு.மாணிக்கம்’. சமுத்திரகனி, பாரதிராஜா, தம்பிராமையா, நாசர், கருணாகரன், ஶ்ரீமன், இளவரசு, சாம்ஸ், சந்துரு, அனன்யா, ரேஷ்மா, வடிவுக்கரசி நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.பி. ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

படம் பற்றி நந்தா பெரியசாமி கூறும்போது, “ஒரு மனிதனால் நேர்மையாக வாழ முடியாது, இந்த சமூகம் வாழ விடாது என்பார்கள். அது தவறான கருத்து, எந்த நிலையிலும் ஒரு மனிதனால் நேர்மையா இருக்க முடியும் என்பதை சொல்லும் படம். அப்படிப்பட்ட திரு.மாணிக்கமாக சமுத்திரகனி வாழ்ந்திருக்கிறார்.

இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகரின் இசை பெரிய பலம். நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் உயிரோட்டமான பின்னணி இசையை இரவு பகல் பாராது உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பேசப்படுவதாக இருக்கும்” என்றார்.

- Advertisement -

Read more

Local News