சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் இன்றைய நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000048470-656x1024.jpg)
2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000048840-819x1024.jpg)
இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் டி.இமான் இணையும் 10வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார்.இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்-ஐ மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.