Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளிவரவுள்ள ‘ஸ்னேக்ஸ் அண்ட் லாடர்ஸ்’ #Sankes & Ladders

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ஞ் தயாரித்துள்ள வெப் தொடரான ‘ஸ்னேக்ஸ் அண்ட் லாடர்ஸ்’ சுவாரஸ்யமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த தொடரை அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் இயக்கியுள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த தொடரின் கதைக்கான பின்னணி 2000ம் ஆண்டு காலத்தைச் சுற்றியது. இதில், கான்வென்டில் படிக்கும் 5 சிறுவர்கள் ஒரு சாகசப் பயணத்தை மேற்கொள்ளும் போது அவர்கள் கடுமையான சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

அந்த சிக்கலிலிருந்து அவர்கள் எப்படி மீளுகிறார்கள், போலீஸ் அதிகாரிகள் நந்தா மற்றும் நவீன் சந்திரா என்ன பங்கு வகிக்கிறார்கள் என்பதே கதை. இது டார்க் ஹியூமர் ஜானரைக் கொண்டது. வரும் 18ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. தொடர் தமிழில் தயாரிக்கப்பட்டாலும், ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News