Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

இப்போதைக்கு ‘நேசிப்பாயா’ படம் மட்டும்தான் ரியாலிட்டி… மீதி எல்லாம் அதுக்கு அப்புறம் தான்… பில்லா பட இயக்குனர் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிந்தும் அறியாமலும், பட்டியல் உள்ளிட்ட படங்களின் மூலம் இயக்குனராக முன்னேறிய விஷ்ணுவர்தன், அஜித்தை வைத்து இயக்கிய ‛பில்லா’ படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அதன்பிறகு மீண்டும் அவரை வைத்து ‛ஆரம்பம்’ என்கிற வெற்றி படத்தையும் கொடுத்தார். அதை தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் தடுமாறி வரும் விஷ்ணுவர்தன் தற்போது நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‛நேசிப்பாயா’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து ரிலீஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இன்னொரு பக்கம் ஏற்கனவே ஹிந்தியில் படம் இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் அடுத்ததாக சல்மான்கானை வைத்து படம் இயக்கப் போகிறார் என்றும் கரன் ஜோஹரின் நிறுவனத்தில் ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் பல செய்திகள் வெளியாகி வந்தன.

இது பற்றி தற்போது மனம் திறந்துள்ள இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறும்போது, “இப்படி வெளியான இரண்டு செய்திகளுமே உண்மைதான். ஆனால் என்னை பொருத்தவரை இந்த படங்கள் துவங்கி படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து ரிலீஸுக்கு வரும்போது தான் அதை ரியாலிட்டியாக நம்ப முடியும். இப்போதைக்கு நேசிப்பாயா படம் தான் ரியாலிட்டி என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News