பிக்பாஸ் டைட்டில் வின்னரான அசீம் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக சில நாட்களாக செய்திகள் உலா வருகிறது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் பலரும் அசீமுக்கு வாழ்த்து செய்திகளை அனுப்ப ஆரம்பித்தனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அசீம், ‘சீரியலில் நான் நடிப்பதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்தி. நான் சினிமாவில் நடிக்க தான் முழுகவனம் செலுத்தி வருகிறேன். நான் நடித்துள்ள படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டு படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே சீரியல் பக்கம் மீண்டும் வருவதற்கு வாய்ப்பே இல்லை’ என்று கூறியுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more