பத்து வருடங்களுக்கு முன்பு, மலையாள நடிகை நஸ்ரியா தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் மிகவும் பிஸியான நடிகையாக செயல்பட்டார். ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘பெங்களூர் டேய்ஸ்’ போன்ற படங்களில் நடித்த நஸ்ரியா, குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பின்னர், நடிகர் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, நஸ்ரியா தனது நடிப்பை குறைத்து, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.
சமீபத்தில், முக்கியமான சில படங்களில் மட்டும் நடித்து வரும் நஸ்ரியா, தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாராகும் படங்களின் பணிகளையும் கவனித்து வருகிறார். சமீபத்தில், நஸ்ரியா புதிய ஹேர்கட் செய்துள்ளார்.
அதை பற்றிய புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, “இந்த ஹேர் கட் செய்த விஷயம் அம்மாவுக்கு மட்டும் தெரிந்தால் என்னையோ அல்லது இந்த ஹேர் கட் செய்த தனசேகரனையோ கொன்றே விடுவார்” என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.