Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

இந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும் போது இப்படி தான் இருக்கும்… தம்மன்னா ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். பல படங்களில் நடித்த அவர், பாலிவுட்டிலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். விஜய் வர்மாவுடன் தமன்னாவும் காதலித்து வரும் நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படுக்கையறை காட்சிகளில் நடிப்பது குறித்து நடிகர்களுக்கு ஏற்படும் மனநிலைகள் பற்றி தமன்னா ஒரு சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.ஒருகாலத்தில் தமிழில் பிஸியாக இருந்தபின்பு வாய்ப்புகள் குறைந்து பாலிவுட் பக்கம் சென்ற தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும், அந்தப் பாடல் ட்ரெண்டிங்கில் உச்சத்திற்கு சென்றது. அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்தனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமன்னா ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படத்தில் நடித்தபோது, நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். இவர்களின் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 4’ திரைப்படத்தில், அவரது அபாரமான நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. ‘அரண்மனை 4’ வெற்றியின் முக்கிய காரணமாக தமன்னாவின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

ஒரு சமீபத்திய பேட்டியில், படுக்கையறை காட்சிகளில் நடிப்பதை நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை. மாறாக, நடிகையை விட அவர்களுக்குத்தான் அதிக பதற்றமும் சங்கடமும் இருக்கும். பலர் இதை என்னிடம் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அந்த காட்சிகளில் நடிக்கும்போது பெண் நடிகைகள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி தான் கவலைப்படுவார்கள். இது மிகவும் விசித்திரமாகவே இருக்கும். நடிகர்களின் மனதில் பல கேள்விகள் இருக்கும் என்றார். அவரது இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News