விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், மேகா ஆகாஷ், சரத்குமார், தனஞ்செயா, பிருத்வி அம்பர், சரண்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரித்துள்ள இந்தப்படம் நாளை வெளியாகிறது.
படம்பற்றி சரத்குமார் கூறும்போது, “இந்தப் படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம். விஜய் மில்டன் கதை சொன்னபோது எனது கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையானது என்பதை உணர முடிந்தது. டப்பிங்கில் பார்க்கும்போது, எனக்கு சொல்லப்பட்டதை விட திரைக்கதையில் இன்னும் வலுவாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். விஜய் மில்டன், விஜய் ஆண்டனியுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.
இந்நிலையில் நிர்மல்குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெற்றி பெற்ற ‘சலீம்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருப்பதாக தகவல்கள் உலவுகின்றன.