Tuesday, November 19, 2024

இந்த தருணத்தில் விவேக், மனோபாலா ஆகியோர் இருந்திருக்க வேண்டும்… இந்தியன் 2 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உருக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியன் 2 படம் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.

சென்னையில் நடந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இந்தியன் 2 படக்குழுவினர் பங்கேற்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் பேசுகையில், “இந்தியன் 2” படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. இரண்டாம் பாகத்தை உருவாக்க அன்றும் இன்றும் உள்ள அரசியல் நிலைமைகள் உதவியாயின. ஊழல் அதிகமாக இருப்பதால் இந்தியன் தாத்தாவின் வருகைக்கு ஒரு பெரிய அர்த்தம் இருக்கிறது.

விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு போன்றவர்கள் இந்த வெற்றி விழாவில் பங்கேற்க வேண்டியவர்கள். காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1 மற்றும் இந்தியன் 2 சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. நாங்கள் திரும்பி பார்ப்பதற்குள் சங்கர் இளைஞராகவே இருக்கிறார். நான் தாத்தாவாகி போனதால் வித்தியாசம் தெரியவில்லை. இப்படியான மேடைகளில் பொதுவாக இருவரும் சண்டை போட்டுக்கொள்வார்கள். மாற்றுக்கருத்து இருக்கும். சங்கரும், கமலும் இணைந்து இதே போல் படம் எடுத்து இருக்கிறோம் அதுதான் இந்தியன் 3. இந்த மேடையில் இதை பேசக்கூடாது.

“இந்தியன் 2” படத்தை 6 வருடங்கள் எடுப்பதற்கு நாங்கள், தொழில்நுட்பம், தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்கள் காரணமல்ல. இயற்கை, கொரோனா வைரஸ், விபத்துக்கள் என பல விஷயங்கள் எங்களுக்கு இடையூறாக வந்தது. அதிலிருந்து எங்களை மீட்டு தோளில் சுமந்துவந்த லைகா நிறுவனத்திற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் என்றென்றும் இந்தியன் 2, இந்தியன் 3 கடமைப்பட்டது.

அதன் வெற்றியை அனுபவிக்கும் முதல் ஆட்கள் அவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் சங்கர் அவர்களுக்கும் எனக்கும் ஆசையாக உள்ளது. அதையடுத்து ஒரு ரசிகனாக ஏற்றெடுத்த உதயநிதி அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தையும், நடிகனையும், டைரக்டரையும் பெரிதாக ரசிக்கிறார் என்பது உண்மை. இங்கு இருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த படத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்தது போல தெரியவில்லை. சந்தோஷமாக நடித்தார்கள். அதுபோல் வாய்ப்பது மிகவும் கடினம்.

இந்த படம் பல சாதனைகளை படைக்கும் என்று நம்புகிறோம், அதனால் அடுத்த விழாவில் அதை கொண்டாடலாம். இனி நீங்கள் கொடுக்கும் பாராட்டு, விமர்சனங்களுக்கு நன்றி என்றார்.

- Advertisement -

Read more

Local News